NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை..!

அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் 070 3500 525 என்ற வட்ஸ்எப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை பதிவுசெய்ய முடியும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியத்தின் பணிப்பாளர் தசுன் கமகே குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகை சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டாம் என தசுன் கமகே சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

போலியான தந்திரோபாயங்கள் மூலம் புகை பரிசோதனை சான்றிதழைப் பலர் பெறுகின்ற போதிலும், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெனில் வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles