NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் வவுணதீவு,காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த 51வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை காலையில் வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடிய போதே அவர் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதிக்கு வந்த வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மரண விசாரணைகளை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சடலம் அழுகிய நிலையில், காணப்படுவதுடன் உடலில் சில காயங்களும் காணப்படுவதாக சடலத்தினை பார்வையிட்ட உறவினர்கள் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸ் நிலைய பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles