NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடக்கும் என எதிர்பார்ப்பு..!

நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை, முதல் அரையாண்டு காலப்பகுதியில் ஒரு மில்லியனை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் முதல் 19 நாள்களில் 69ஆயிரத்து 825 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்து 66 ஆயிரத்து 825 சுற்றுலாப்பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles