NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறுவர்களிடையே ல் நோய் அதிகரித்து வருவதாக தெரிவிப்பு!

05 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் பல் நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

முன்பள்ளி வயது முதல் சிறுவர்களின் வாய் ஆரோக்கியம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகப் பல் மருத்துவப் பிரிவின் பேராசிரியர் திலிப் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே பேராசிரியர் திலிப் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் 10 வருடங்களுக்கு ஒருமுறை வாய்வழி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 இந்த நாட்களில் 2024-2025 ஆண்டுக்கான ஆய்வுகள் இடம்பெறுகின்றன

இதன் ஊடாக 5 வயது குழந்தைகளுக்கு 63% வாய் நோய்கள் இருப்பதைக் காண்டறிய முடிந்துள்ளது.

அதாவது 100 குழந்தைகளை எடுத்துக் கொண்டால் 63 பேருக்கு பற்களில் துவாரம் உள்ளது.

10 குழந்தைகளை எடுத்தால் 6 பேருக்கு உண்டு. 12 வயதிற்குள், இது கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்த 63% வீதத்தை பாடசாலை வருவதற்கு முன்பே 55% வரை கொண்டு வர முடிந்தால் அது பெரிய விடயம். இதனை எளிமையாக செய்யலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை, குளோரைட் இல்லாத பற்பசை மூலம் பல் துலக்கவும்.

சரியான துலக்குதல் நுட்பத்தை கற்றுக்கொடுங்கள் மற்றும் இனிப்பு உணவுகளை குறைக்கவும். முடிந்தவரை இனிப்புக்களை பிரதான உணவின் போது மாத்திரம் மட்டுப்படுத்தினால் அது எளிதானது.” என்றார்.

Share:

Related Articles