119ஆவது சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளைத் திறந்த வெளியில் சந்திப்பதற்கு அவர்களது உறவினர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த தினத்தில் கைதிகளைப் பார்வையிட வருபவர்கள் அவர்களுக்கான உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமென சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.