NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதியின் மகளிர் தினச் செய்தி – ஒம்புட்ஸ்வுமனுக்கான முன்மொழிவு!

நாட்டின் பொருளாதாரத்திற்கு பரந்தளவிலான பங்களிப்பை வழங்கும் வகையில், சமத்துவத்தின் அடிப்படையில் பெண்களுக்கு தேவையான திறன்களுடன் வலுவூட்டும் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எழுத்தறிவு பெற்ற இலங்கைப் பெண், தொழில்ரீதியாக நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதாகவும், எனவே இது தேசத்தின் பலமாக இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான சட்டம், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தேசிய மகளிர் ஆணையம் ஒரு சுதந்திர அமைப்பாக நிறுவப்படுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், தோட்டங்கள் மற்றும் ஆடைத் துறைகளில் இயக்குநரக சபைகளுக்கு ஒம்புட்ஸ்வுமன் என்ற பதவியின் கீழ் பெண்களை நியமிக்க வேண்டியதன் அவசியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாபதிபதி அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles