NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜூலையில் பஸ் கட்டணத்தில் சலுகைகளை வழங்க முடியும் – கெமுனு விஜேரத்ன

எதிர்வரும் ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பஸ் கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் இடம்பெறும் தேர்தல் பேரணிகள் காரணமாக பஸ் தொழிற்துறைக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரூபாயின் பெறுமதி உயர்வினால் உதிரி பாகங்களின் விலைகள் குறைவடையும் எனவும், உலக சந்தையில் மின்கலங்கள்; மற்றும் பல வாகன உதிரிபாகங்களின் விலைகள் தமது அறிவின் படி குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன், ஜூலை மாதம் பஸ் கட்டணத்தை தீர்மானிக்கும் போது இந்த காரணிகள் கருத்தில் கொள்ளப்படும் என கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles