வருட இறுதியில் சுற்றுலா தளங்களைப் பார்வையிடுவதற்காக வருகைதரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கடந்த 22 ஆம் திகதி முதல் நாளாந்தம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 10 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.