NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படும் வவுச்சர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பபடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் பின்னர், குறித்த வவுச்சர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கத்தை அதிகரிப்பதற்கும், போதுமான சுகாதார வசதிகளைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்ளும் சிறுமிகளுக்கு உதவும் பொருட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிதி சுமார் ரூ. 1 பில்லியன் மற்றும் ஒவ்வொரு வவுச்சரின் மதிப்பும் சுமார் ரூ. 1,200 ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles