NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்று வழங்கப்படவுள்ளது!

சகல பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த 11 ஆம் திகதி மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தன.

ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களுக்கு அமைய வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் நேற்று முதல் வழங்கப்பட்ட நிலையில் ஏனைய வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்று வழங்கப்படவுள்ளன.

இந்த நிலையில், இன்றைய தினத்துக்குள் சகல வேட்பாளர்களுக்குமான விருப்பு இலக்கங்களை அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வேட்பாளர்கள், வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய தொகையை அறிவித்து இன்று அல்லது நாளைய தினம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles