மதுவரி செலுத்துவதை தொடர்ந்தும் புறக்கணிக்கும் நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகளை இடைநிறுத்தவும், உற்பத்தி உரிமத்தை அடுத்த வருடத்திற்கு நீடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டு 23 மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.