மாத்தறை வெலிகம – கப்பரதொட்ட வீதி பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.