நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கவில்லை என எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் நாட்டில் சில வாரங்களாக லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால் நுகர்வோர் மற்றும் வரத்தகர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பும் இடமான மாபிம பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் விநியோகம் தடைபட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஹம்பாந்தோட்டை முனையத்திற்கு எரிவாயு கொண்டு வரும் கப்பல் தாமதமாகியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கடந்த காலங்களில் எரிவாயு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது என்றும் இப்போதும் குறித்தக் கப்பலில் இருந்து எரிவாயு இறக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று முன்தினம் முதல் செயல்பட்டு வருவதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் விநியோக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.