NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கு, பேருதவியை வழங்கிய – Lyca குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன்

இலங்கை அரசாங்கத்தினால் 3ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கும் Lyca குழுமத்தின் நிறுவனரும் , லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா 25 லட்சம் ரூபாய்களை கடந்த செவ்வாய்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கி வைத்தார்.

ஜனாதிபதியுடனான ஒவ்வவொரு சந்திப்புகளிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அல்லிராஜா சுபாஸ்கரன் விடுத்த வேண்டுகோள்களாலும், நீதிமன்ற தீர்ப்புகளாலும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பாலும், பிணை அடிப்படையிலும், இதுவரை 26 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

நீண்டகாலம் சிறைகளில் தம் வாழ்வை தொலைத்த இவர்கள், தமது வாழ்வை , மறுசீரமைக்கவும், தமது குடும்பங்களுடனும், சமூகத்துடனும், இணைந்து வாழவும் அவர்களுக்கான வாழ்வாதாரத்திட்டம் அவசியம் என்பதனை உணர்ந்த Lyca குழுமத்தின் நிறுவனரும் , லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் செயற்பாட்டு வடிவமே ஞானம் அறக்கட்டளையின் ஊடான இந்தப் பேருதவியாக அமைந்துள்ளது.

அதன் அடிப்படையில் லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் தலைமையிலான லைக்கா ஞானம் அறக்கட்டளை, முதற்கட்டமாக விடுதலை பெற்ற 5 பேருக்கும், இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 10 பேருக்கும், தற்போது 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 13 பேருக்கும் 28 அரசியல் கைதிகளுக்கும் தலா 25 லட்சம் ரூபாய்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles