பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது சுமார் மூன்று சதவீதமாக இருக்கும் தொடக்கக் கல்வியை விட்டு வெளியேறும் குழந்தைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் இந்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தலைவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இது ஒரு பாடசாலையை மட்டுமே அடையக்கூடிய தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பெரும் அநீதி என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும்இ இந்த நடவடிக்கையின் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள சுமார் பத்தாயிரம் பாடசாலை மாணவர்களை உதவியற்றவர்களாக மாற்றும் என பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம்இ கீழ்நிலை உயர்தரப் பிரிவுகளை மூடிவிட்டுஇ அவற்றை மற்ற பாடசாலைகளுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் தற்போது தயாராகி வருவதாகவும் இதற்கு செய்ய வேண்டியதுஇ சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அந்தப் பாட்திற்கு ஏற்ற ஆசிரியர்களை வழங்குவதும் வசதிகளை வழங்குவதுமே தவிர அந்தப் பிரிவுகளை மூடுவது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.