NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2024 க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணி வரை மாத்திரமே விண்ணப்பிக்க முடியுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.ள

அத்துடன், விண்ணப்பதாரிகள் இணைய வழி முறையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க கடந்த நவம்பர் 5ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் இன்றைய தினத்திற்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் இணையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை தான் உறுதியாக வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணங்களை பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles