நாட்டின் பொருளாதாரம் ஒரு குறுகிய தரப்பினரின் கைக்குள்ளே சிக்குண்டுள்ளதாகவும் ஆகவே, 2025 ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தின் ஊடக பொது மக்களின் பொருளதார உரிமை பாதுகாக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது நிதி அமைச்சர் என்ற வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.