கண்டி பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷேத பெர்னாண்டோவின் வழிகாட்டலின் கீழ் நேற்று வாரியபொல நகரம் மற்றும் வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மினுவங்கேட் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 22 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண் ஒருவரையும் இரண்டு பேரையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது, அவர்களிடமிருந்து 85 கிராம், 210 மில்லிகிராம் ஹெரோயின், 384,000.00 ரூபா மற்றும் ஹெரோயின் பொதியிடல் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன .
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.