QR ஐ தொடர்ச்சியாக கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) நிர்வாகம் அதிகாரிகளுடன் இன்று காலை நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் களஞ்சியப்படுத்தும் கொள்கலன் கொள்ளளவில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தை பராமரிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 15ஆம் திகதிக்குள் அனைத்து சிபெட்கோவுக்கு சொந்தமான எரிபொருள் கொள்கலன்களுக்கும் GSP கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்படும் என்றும், அதன்பிறகு அனைத்து தனியார் கொள்கலன்களுக்கும் அது செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.