NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

5 மாகாணங்களை உள்ளடக்கி சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் உருவாக்கம்.!

இலங்கை பொலிஸ் தற்போது 5 மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை அமைத்துள்ளதாக கட்டான பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

அதேபோல், தற்போது பொலிஸ் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வலுவான நிலையில் உள்ளதாகவும், அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஒன்று செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்கீழ் சைபர் குற்ற விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினுள், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஒன்று இயங்குவதாகவும் அவர் கூறினார்.

மேலும், 5 மாகாணங்களை உள்ளடக்கும் வகையில் அம்பாறை, குருநாகல், மாத்தறை, கண்டி ஆகிய இடங்களில் பிராந்திய மட்டத்தில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மூலமும் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share:

Related Articles