NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அஜித் ரோஹணவின் கையால் பரிசை வாங்க மறுத்த இளைஞன்!

சைக்கிளோட்டப் போட்டியொன்றில் இரண்டாம் பெற்றதற்கான பரிசை பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின் கையால் வாங்க மறுத்த இளைஞனை பொலிஸார் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற P2P சைக்கிளோட்டப் போட்டியின் 40 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் இளைஞரொருவர் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டிருந்தார்.

அவருக்கான பரிசை நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண வழங்க முயன்ற போது அதனைப் பெற்றுக் கொள்ள மறுப்புத் தெரிவித்திருந்தார்.

பொதுமக்கள் மீது பொலிஸார் மேற்கொள்ளும் அராஜகங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தான் அவ்வாறு நடந்து கொண்டதாக பின்னர் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த இளைஞர் தொட்ர்பில் அவரது ஊரின் கிராம அதிகாரி போன்றோர் ஊடாக பொலிஸார் தகவல் சேகரிக்கத் தொடங்கியுள்ளதுடன், அவரைப் பின்தொடரவும் ஆரம்பித்துள்ளதாகவும் அதன் காரணமாக அவரது குடும்பத்தினர் பெரும் அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகன்றது.

Share:

Related Articles