இரு கொலை சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பியகம மற்றும் ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 23 ஆம் திகதி பியகம, மல்வானை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.
சம்பவத்தில் மல்வானை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்திருந்தார்.
விசாரணையில் உயிரிழந்த நபருக்கும், கைதான சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறே கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
மேலும், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ருவன்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, காலி, கோனபீனுவல பிரதேசத்தில் நேற்று (09) இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொலை சம்பவத்தின் பின்னர் 2022ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய சந்தேக நபர் காலி, கோனபீனுவல பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் அறை ஒன்றை பெற்று தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.