NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு – தெமட்டகொடை பகுதியிலுள்ள கிளினிக் ஒன்றில் கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில், கொழும்பு தனியார் வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் தாதி ஒருவரும் நேற்று தெமட்டகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் மகப்பேறு வைத்தியர் ஒருவரும் மருத்துவ நிலையத்தின் தாதி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிலியந்தலை பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது வயிற்றில் உள்ள குழந்தையின் சிறுநீரக செயலிழப்பு தொடர்பில் குறித்த வைத்தியரை சந்தித்துள்ளார்.

குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியாது, எனவே அறுவை சிகிச்சை மூலம் தாயின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர் கூறியுள்ளார். அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தால் அதற்கு இரண்டரை இலட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டும் என்றும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு இணங்கிய பெண், தனது கணவருடன் நேற்று தெமட்டகொடையில் உள்ள வைத்தியரின் கிளினிக்கிற்கு சென்றுள்ளார்.
அங்கு கருக்கலைப்பு செய்த பின்னர் சுகவீனமடைந்த பெண் நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, வைத்தியரையும் தாதியையும் கைது செய்த தெமட்டகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles