காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் சிறிதளவு ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை (11) நாள் முழுவதும் காற்றின் தர சுட்டெண் 58 தொடக்கம் 108க்கு இடையில் இருக்கும். எனவும் காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் சிறிதளவு ஆரோக்கியமற்ற நிலையை குறிக்கின்றது எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளைகளில் காற்றின் தரச் சுட்டெண் ஆரோக்கியமற்று காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.