ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு பல மாதங்களாக பதிவேற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்பது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் ஜனாதியதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கு மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கணக்குகள் மாத்திரம் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் கடந்த வருடம் ஜூலை 21ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு பதிவும் வெளியிடப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.