NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்களித்ததனை உறுதிப்படுத்தும் வகையில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சிறுவிரலில் இடப்பட் மை, இன்னும் சிலருக்கு நீங்காத நிலையில், தற்போது ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles