NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மன்னாரில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த இரண்டு வெதுப்பகங்களுக்கு சீல்..!

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  சுகாதார சீர்கேடுகள் உடன் பொது மக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இயங்கி வந்த இரண்டு வெதுப்பகங்களுக்கு நீதிமன்ற உத்தரவு பெற்று மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று (8)வியாழக்கிழமை சீல் வைத்துள்ளனர்.

கடந்த பல மாதங்களாக மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த வெதுப்பகங்கள் தொடர்பில் பரிசோதிக்கப்பட்டு 12 குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என கடிதம் மூலம் அறிவிக்கப்பட்ட போது குறித்த வெதுப்பகங்கள் அறிவிப்புக்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் நேற்றைய தினம் (7) குறித்த வெதுப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 மன்னார் நகரில் உள்ள இரண்டு வெதுப்பகங்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை மூடு மாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டி 12 சுகாதார பிரச்சினைகளும் நிவர்த்தி செய்யும் வரை குறித்த வெதுப்பகங்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் அனுமதி மறுக்கப்படுவதாக வும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 நீதிமன்ற அறிவித்தல் ஊடாக சுட்டிக்காட்டப்பட்ட வெதுப்பகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதே போன்று மன்னார் மாவட்டத்தில் சுகாதார சீர்கேடுகள் உடன் இயங்கி வரும் உணவகங்கள் தொடர்பிலும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினால் நடவடிக்கை மேற்கொள்ளப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles