திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகம சாஸ்திரப்படி கருவறையின் உச்சியின் மீது விமானங்கள்இ ஹெலிகாப்டர் பறக்க கூடாது என விதிமுறை உள்ளது.
இதனால் திருப்பதி மலையில் விமானங்கள்இ ஹெலிகாப்டர்கள் பறக்கவும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் வீடியோ போட்டோ எடுக்கவும் திருப்பதி தேவஸ்தானம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இந்திய இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அதிக சத்தத்துடன் ஏழுமலையான் கோவில் கருவறை மீது பறந்துள்ளதால் ஆச்சாரியார்கள் வேத பண்டிதர்கள்இமடாதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
ஏழுமலையான் கோவில் மீது விமானங்கள்இஹெலிகாப்டர்கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் பலமுறை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் மத்திய அரசு திருப்பதி மலையை தடை மண்டலமாக அறிவிக்க முடியாது என தெரிவித்து உள்ளது.