(அமிர்தப்பிரியா சிலவிங்கம்)
2023 லங்கா பிரீமியர் லீக்கில் 18 போட்டிகளுக்குப் பிறகு கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் மத்தீஷ பத்திரன அதிக விக்கெட்டுகளை பதிவு செய்ய முடிந்தது.
இவர் 07 போட்டிகளில் விளையாடிய போது 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதன்படி, இந்தப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கு வழங்கப்படும் ‘ஆரஞ்சு தொப்பி’யை அவரால் வெல்ல முடிந்துள்ளது.
பி – கண்டி அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க 07 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் ஜப்னா கிங்ஸ் அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகே மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். 08 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.