(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 2023ஆம் ஆண்டுக்கான நான்காவது பருவகாலத் தொடர் நேற்று (28) வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து, கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி மற்றும் ஜப்னா கிங்கஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
இதில் போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது.
கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் நஷீம் ஷாஇ மதீஷ பத்திரனஇ சாமிக்க கருணாரட்ன மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர். பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 174 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி அதன் தலைவர் நிரோஷன் டிக்வெல்ல மூலம் சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்ற போதும் ஏனைய வீரர்களின் மோசமான ஆட்டம் காரணமாக 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
இதனை தொடர்ந்து, இன்றைய தினம் (31) இடம்பெறவுள்ள போட்டியில் மதியம் 3 மணிக்கு தம்புள்ள ஓரா அணியும் ஜப்னா கிங்ஸ் அணியும் இரவு 7.30க்கு இடம்பெறவுள்ள போட்டியில் பி லவ் கண்டி மற்றும் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிகளும் மோதவுள்ளன.