NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPL தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்!

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான டிக்கெட் விற்பனை இன்று (24) பிற்பகல் 03 மணி முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், முதலாவது போட்டி கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

அதன்படி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முதற்கட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது.

டிக்கெட்டுகளை பின்வரும் இணையத்தளம் மூலம் பதிவு செய்துக்கொள்ள முடியும்.

https://lk.bookmyshow.com/special/kandy-vs-dambulla/ET00005360?webview=true

அதனைத்தொடர்ந்து, லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பின்னர் 13ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை எஞ்சிய போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Share:

Related Articles