NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPL தொடர் மூலம் Little Hearts திட்டத்துக்கு நன்கொடை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூலம் நன்கொடையாக சேகரிக்கப்பட்ட 18 இலட்சம் ரூபாய் பணம் லிட்டில் ஹார்ட் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 30ஆம் திகதி ஆரம்பமாகிய லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 6000 ரூபாயும், ஒவ்வொரு நான்குக்கும் 4000 ரூபாயும், ஒவ்வொரு டொட் பந்துக்கும் 2000 ரூபாயும் ‘லிட்டில் ஹார்ட்’ திட்ட நிதிக்காக வழங்குவதற்காக லங்கா பிரீமியர் லீக் அமைப்பாளர்களால் திட்டமிடப்பட்டது.

அதற்கமைய தொடர் ஆரம்பமாகி தற்போது வரை நடைபெற்ற முதல் ஐந்து போட்டிகளின் போது 0 சிக்ஸர்கள், 129 பவுண்டரிகள் மற்றும் 494 டொட் பந்துகளும் பதிவாகின

அதன் மூலம் சேகரிக்கப்பட்ட 18 இலட்சம் ரூபாய்ஹலிட்டில் ஹார்ட்’ திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles