NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPL: பி-லவ் கண்டி அணிக்கு முதல் வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் T20 தொடரின் 6ஆவது லீக் போட்டியில், பி-லவ் கண்டி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

கண்டி-பல்லேகல மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அவுரா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை ஓரா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக தனஞ்சய டி சில்வா 61 ஓட்டங்களையும் அவிஷ்க பெனார்டோ 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கண்டி அணியின் பந்துவீச்சில் முஜிப் உர் ரஹ்மான் மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர மற்றும் மொஹமட் ஹஸ்னெய்ன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 157 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பி-லவ் கண்டி அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் கண்டி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் சந்திமால் 48 ஓட்டங்களையும் பகர் சமான் மற்றும் அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் தலா 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ளை ஓரா அணியின் பந்துவீச்சில், தஞ்சய டி சில்வா மற்றும் ஹெய்டன் கெர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Share:

Related Articles