(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
லங்கா பிரிமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் இன்று (14) நடைபெற உள்ளது.
அதன்படி, வெளிநாட்டு வீரர்களுடன் சேர்த்து 360 வீரர்கள் ஏலத்திற்கு விடப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.
204 இலங்கை வீரர்களும், 156 வெளிநாட்டு வீரர்களும் இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்திற்கு வழங்கப்படவுள்ளனர்.
வீரர்கள் ஏலம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது.
முதன்முறையாக நடக்கும் LPL ஏலத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சுவாரஸ்ய தகவல்கள்
துடுப்பாட்ட வீரர்கள், சகலதுறை வீரர்கள், வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் விக்கெட் காப்பாளர்கள் போன்ற பல தேர்வுகள் அடிப்படையில் 51 சுற்றுகளாக நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு அணியும் தலா 500,000 டொலர்களுடன் இந்த ஏலத்தில் மொத்தமாக 2.5 மில்லியல் டொலர்கள் செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் ஓர் அணிக்கு நான்கு வெளிநாட்டு வீரர்கள் உட்பட குறைந்தது 16 வீரர்களை வாங்க முடியும். ஏற்கனவே ஒவ்வொரு அணியும் இரு இலங்கை வீரர்களுடன் சேர்த்து இரு வெளிநாட்டு வீரர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஒவ்வொரு அணியும் 21 வயதுக்கு உட்பட்ட இலங்கை வீரர் ஒருவரை வாங்குவது கட்டாயமாகம்.
ஏலத்திற்காக எடுத்துவரும் தொகையில் ஒவ்வொரு அணியும் குறைந்தது 85 வீதத்தை தமது அணியை அமைப்பதற்கு முதலிடுவதை உறுதி செய்ய வேண்டும்.
இன்றைய ஏலத்தை நடத்துபவராக இந்தியாவின் வர்ணனையாளர் சாரு ஷர்மா செயற்படவுள்ளது.