NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPl இல் முதல் வெற்றியை பதிவு செய்தது கண்டி அணி…!

லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் கண்டி பெல்கன்ஸ் 6 விக்கெட்டுக்களால் அணி வெற்றிப் பெற்றுள்ளது. லங்கா பிரிமியர் லீக் தொடர் நேற்று ஆரம்பமான நிலையில் முதல் போட்டியில் தம்புள்ளை சிக்சர்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாட தம்புள்ளை அணிக்கு அழைப்பு விடுத்தது.அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.அவ்வணி சார்பில் சமிந்து விக்கிரமசிங்க 62 ஓட்டங்களையும் மற்றும் மார்க் செப்மேன் 91 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர்.பந்து வீச்சில் தசுன் சானக்க 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய, 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 17.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அவ்வணி சார்பில் தினேஷ் சந்திமால் அதிகபட்சமாக 65 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 37 ஓட்டங்களையும் மற்றும் தசுன் சானக்க 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

Share:

Related Articles