NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPL கிண்ணத்தை சுவீகரித்தது Jaffna Kings

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்றைய போட்டியில் காலி மார்வெல்ஸ் மற்றும் ஜவ்னா கிங்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜவ்னா கிங்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி மார்வெல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.

இதன்படி 185 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஜவ்னா கிங்ஸ் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அந்த வகையில் 15.4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 26 பந்துகள் மீதமிருக்க 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 185 ஓட்டங்களை பெற்று 2024 ஆம் ஆண்டுக்கான எல்.பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles