(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
லங்கா பிரீமியர் லீக் T20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணியும் யும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பி-லவ் கண்டி அணிகொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக பாபர் அசாம் 59 ஓட்டங்களையும் நுவனிந்து பெனார்டோ 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பி-லவ் கண்டி அணியின் பந்து வீச்சில இசுரு உதான 3 விக்கெட்டுகளையும் தஹானி மற்றும் மொஹமட் ஹஸ்னெய்ன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பி-லவ் கண்டி அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக அஞ்சலோ மத்தியுஸ் 25 ஓட்டங்களையும் சப்ராஸ் அஹமட் ஆட்டமிழக்காது 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணியின் பந்துவீச்சில் மதிஷன பத்திரன 3 விக்கெட்டுகளையும் நஷிம் ஷா மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொஹமட் நவாஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.