NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPL 2023: காலி டைட்டன்ஸ் சுப்பர் ஓவரில் வெற்றி!


(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)


லங்கா பிரீமியர் லீக் T20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், காலி டைடன்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், காலி டைடன்ஸ் அணி சுப்பர் ஓவரில் திரில் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், காலி டைடன்ஸ் அணியும் தம்புள்ளை அவுரா அணியும் மோதின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அவுரா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி டைடன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக பானுக ராஜபக்ஷ 48 ஓட்டங்களையும் தசுன் சானக 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ளை அவுரா அணியின் பந்து வீச்சில், தஹானி 2 விக்கெட்டுகளையும் பினுர மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 181 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தம்புள்ளை அவுரா அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் வெற்றி இலக்கு சமநிலையடைந்ததால் போட்டி சுப்பர் ஓவருக்கு நகர்ந்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக தனஞ்சய டி சில்வா 43 ஓட்டங்களையும் குசல் பெரேரா 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

காலி டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், தசுன் சானக 3 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித 2 விக்கெட்டுகளையும் விஷ்வ பெனார்டோ மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதற்கமைய சுப்பர் ஓவரில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அவுரா அணி 10 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய காலி டைடன்ஸ் அணி, இரண்டு பந்துகளில் வெற்றி இலக்கை கடந்தது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles