NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPL 5th Edition – Galle Titans; Galle Marvels ஆக மாறுகிறது!

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) 5வது பதிப்பிற்காக LPL உரிமையாளர் அணியான  ‘Galle Titans’ அணி, ‘Galle Marvels’ என மறுபெயரிடப்பட்டுள்ளது.

“Galle Marvels” என பெயரிடப்பட்ட புதிதாக அறிவிக்கப்பட்ட Franchisee ஐ அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று (11) ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, இந்த பெயர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வை “Galle Marvels” அணியின் புதிய உரிமையாளர்களான பிரேம் தக்கர், மாலவ் படேல், நீல் படேல் மற்றும் ஹிமான்ஷு படேல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வு இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கை கிரிக்கெட் போட்டிக் குழுவின் தலைவர் சமந்த தோடன்வெல, ஐPபு குழும நிறுவனர் மற்றும் நிறைவேற்று அதிகாரி அனில் மோகன் தலைமையில் இடம்பெற்றது.

Theme பாடலுடன் Logo மற்றும் அதிகாரப்பூர்வ ஜெர்சியை வெளிப்படுத்த இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் லான்ஸ் க்ளூசனர் காலி மார்வெல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் லங்கா T10 லீக்கில் விளையாடவுள்ள ‘மொறட்டு மார்வெல்ஸ்’ என பெயரிடப்பட்ட அணியும் அறிவிக்கப்பட்டது.

மொரட்டு மார்வெல்ஸ் அணிக்கு இலங்கையைச் சேர்ந்த மாஸ்டர் பிளாஸ்டர் சனத் ஜெயசூர்ய பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டது.

இரு அணிகளுமான தீம் பாடலுக்கான வரிகளை இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க எழுதியிருந்தமை சிறப்பம்சமாகும்.

இந்த போட்டிகளுக்கு அப்பால் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பதற்கான தமது உறுதிப்பாட்டினை இரு அணிகளினதும் உரிமையாளர்கள் வெளிப்படுத்தினர்.

Share:

Related Articles