NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPL: ஜப்னா கிங்ஸ் அணி அபார வெற்றி!

லங்கா பிரிமியர் லீக் தொடரின் இன்று இடம்பெற்ற 7 ஆவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இன்றைய போட்டிய கண்டி பல்லேகெலே மைதானத்தில் ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி டைடன்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி டைடன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 12.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

ஜப்னா அணி சார்பில் Rahmanullah Gurbaz 54 ஓட்டங்களையும், Towhid Hridoy ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

Share:

Related Articles