NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2024 இந்தியன் பிரீமியல் லீக் சீசனுக்கு முன்னதாக பயிற்சி அமர்வுகளில் பங்கெடுக்க தங்கள் அணித் தலைவர் தல தோனி செல்வதைக் கண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் வெறித்தனமான உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தோனியை காண்பதை, சி.எஸ்.கே. ரசிகர்கள், இது தமது கனவு நனவாகும் தருணம் என்றும், அவரை காண்பது கடவுளை பார்ப்பதற்கு சமனானது என்றும் வர்ணித்தனர்.

பயிற்சி நடவடிக்கைகளுக்காக தோனி வருகை தருவதையும், அவரை உற்சாப்படுத்தும் வகையிலான ரசிகர்களின் ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் குறித்த வீடியோவை சி.எஸ்.கே. நேற்றைய தினம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

அந்த வீடியோவில்,

தோனியைப் பார்க்க சி.எஸ்.கே. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் பயிற்சி அமர்வுக்கு புறப்படுவதற்காக தோனி வந்தபோது பலத்த ஆரவாரத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தனிர்.

இதன்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவர் கையை உயர்த்தி ரசிகர்களுடனான தனது அன்பை வெளிப்படுத்தினார்.

தோனியின் வருகைக்காக காத்திருந்த ரசிகர் ஒருவர் கூறுகையில்,

எம்எஸ் தோனியின் வருகைக்ககா நாங்கள் காத்திருக்கிறோம்.

அவர் தனது கையுறை அல்லது அவரது பேட்டை சரிசெய்வதை நான் பார்க்க விரும்புகிறேன். அவர் என்ன செய்தாலும், எம்எஸ் தோனியைப் பார்த்து அவரை உற்சாகப்படுத்த நாங்கள் வருவோம்.

தோனிக்காக உலகம் முழுவதும் உள்ளவர்கள் ஆரவாரம் செய்யட்டும், ஆனால் தமிழ் நாட்டு மக்களை பொருத்தவரையில் அவர் எப்போதும் ‘தல’ தான் – என்றார்.

மேலும் பல ரசிகர்களின் கருத்து,

இது ஒரு அற்புதமான தருணம். இது ஒரு கனவு நனவாகும். இந்த ஒரு நொடி எங்களுக்குப் போதும். இந்த அற்புதமான காட்சிக்கு மிக்க நன்றி என்று ஒரு ரசிகர் கூறினார்.

தோனியைப் பார்ப்பது எங்களுக்கு மிகவும் பெரிய விடயம், நாங்கள் ஒரு கடவுளைப் பார்த்தோம் என்று ஒரு ரசிகர் கூறினார்.

இங்கே நின்று தோனியை உள்ளே இரண்டு மணி நேரம் பார்த்தேன், அது ஒரு உண்மையான நெகிழ்ச்சியான தருணம் என்று மற்றொரு ரசிகர் கூறினார்.

வரவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக சென்னை அணிக்காக தோனியின் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

42 வயதான அவர், 2024 ஐ.எ.எல். போட்டிகளில் மீண்டும் களமிறங்குவதற்காக முழு நம்பிக்கையுடன் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

2023 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சி.எஸ்.கே., குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற பின்னர் தோனி மீண்டும் போட்டிக்கு திரும்பவுள்ளார்.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் 2024 ஐ.பி.எல். தொடரின் தொடக்க ஆட்டத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles