NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Mobile Number இல்லாமல் WhatsAppஐ பயன்படுத்துவதற்கான புதிய வழி !

வாட்ஸ்அப் யூசர்நேம் (Whatsapp Username) மற்றும் ரிடிசைன்டு செட்டிங்ஸ் இண்டர்ஃபேஸ் உள்ளிட்ட அம்சங்கள் விரைவில் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட உள்ளதாக WABetainfo தெரிவித்துள்ளது.

புதிய வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.11.15 வெர்ஷனில் உள்ள புதிய அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது அக்கவுண்ட்களில் யூசர்நேம் வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் – ப்ரோஃபைல் ஆப்ஷன்களில் (Profile Option) இயக்க முடியும்.

இந்த அம்சம் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மொபைல் நம்பர் மூலம் காண்டாக்ட்களை அறிந்து கொள்வதற்கு மாற்றாக யூசர்நேம் மூலம் அறிந்து கொள்ள செய்கிறது.

பயனர்கள் தாங்கள் விரும்பும் வித்தியாசமான அல்லது எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் யூசர்நேமை செட் செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் பயனர்கள் தங்களது மொபைல் நம்பர் இல்லாமல், காண்டாக்டை மற்றவர்களுக்கு ஷேர் செய்ய முடியும்.

Share:

Related Articles