ஒன்பிளஸ் போன் 6, 7, 8 போன்ற மாடல்கள், ஒன்பிளஸ் போன் சிஇ. ஒன்பிளஸ் போன் நோர்ட். ஒன்பிளஸ் போன் நோர்ட் லைட் போன்ற மாடல்கள் பல ஒன்பிளஸ் போனில் உள்ளன
ஒன்பிளஸ்இ சீனாவின் குவாங்டாங்இ ஷென்சென் நகரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு சீன நுகர்வோர் மின்னணு உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். இது ஓப்போவின் துணை நிறுவனமாகும்.
ஒன்பிளஸ் போன்களில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக அவ்வப்போது புகார்கள் வருவது வழக்கம். உதாரணமாக இந்த போன்களில் அப்டேட் செய்யப்பட்ட பின் ஸ்கிரீன் நடுவில் கோடு வருவதாக புகார்கள் வைக்கப்படுவது வழக்கம். பலருக்கும் பச்சை நிறத்திலும்இ கருப்பு நிறத்திலும் ஸ்கிரீனில் கோடு ஏற்பட தொடங்கி உள்ளது. இது எத்தனை முறை அப்டேட் செய்யப்பட்டாலும் போவது இல்லை என்று ஒன்பிளஸ் யூசர் புகார்கள் வைக்கின்றனர். இந்த நிலையில் தற்போது புதிய பிரச்சனை ஒன்று ஒன்பிளஸ் போன்களில் ஏற்பட தொடங்கி உள்ளன.
அதன்படி ஒன்பிளஸ் போன் பலவற்றில் திடீரென ஸ்கிரீன் கருப்பு நிறம் ஆகும் பிரச்சனை ஏற்பட தொடங்கி உள்ளது. லோ எண்ட் மாடல் என்றாலும் சரி ஹை எண்ட் மாடல் என்றாலும் சரி. பல்வேறு மாடல்களில் இந்த பிரச்சனை ஏற்பட தொடங்கி உள்ளது. போன் வேலை செய்யும்இ பாடல்கள் ஓடினால் ஸ்பீக்கரில் கேட்கும். ஆனால் ஸ்கிரீன் மட்டும் கருப்பாக இருக்கும். ஸ்கிரீன் மட்டும் இயங்காது. சில மணி நேரங்களில் இந்த பிரச்சனை சரியாகி மீண்டும் ஸ்கிரீன் இயங்க தொடங்கும். இந்த பிரச்சனை திடீரென ஒன்பிளஸ் போன்களில் அடிக்கடி ஏற்பட தொடங்கி உள்ளமைக் குறிப்பிடத்தக்கது.