NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

RCBஇன் தோல்விக்கு காரணம் என்ன?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய லீக் போட்டியில் 288 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டி, 262 ஓட்டங்கள் எடுத்து ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோல்வியை சந்தித்திருந்தது.

இந்நிலையில், தோல்விக்கும் பிறகு அணியின் தலைவர் டூப்ளசி தோல்வி குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

“சிறந்த துடுப்பாட்ட செயல்திறனை நாங்கள் வெளிப்படுத்தினோம். இயன்றவரை இலக்கை நெருங்கி செல்ல முயற்சித்தோம். ஆனால், 280 ஓட்டங்களை எட்டுவது கடினமானது. சில விடயங்களை முயற்சி செய்து பார்த்தோம். வேகப்பந்து வீச்சாளர்கள் சிரமப்பட்டனர். துடுப்பாட்டத்திலும் சில இடங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.

Powerplay ஓவர்கள் முடிந்த பிறகும் ரன் ரேட்டில் சரிய கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அணியின் வீரர்கள் இலக்கை துரத்திய போது ஃபைட் பேக் செய்தனர். என்றாலும், 30-40 ஓட்டங்களை கூடுதலாக கொடுத்துவிட்டோம். இதுவே தோல்விக்கு காரணம்.” என டூப்ளசி தெரிவித்தார்.

கடந்த 2017 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 49 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ஓட்டங்களை எடுத்த அணியாக அந்த அணி அறியப்படுகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடப்பு சீசனில் 287 ஓட்டங்களை விட்டுக் கொடுத்துள்ளது ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இதன் மூலம் ஐபிஎல் களத்தில் அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்த அணியாகவும் பெங்களூரு அறியப்படுகிறது.

நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெற்றுள்ளது. இதில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது அந்த அணி. அதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் 2 புள்ளிகளுடன் உள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles