NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

RIP Twitter : எலான் மஸ்க்கால் Trendஆன Hashtag !

உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் சமீபத்தில் சர்வதேச அளவில் மீண்டும் முடங்கியுள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு ஒரே ஆண்டில் 3வது முறையாக ட்விட்டர் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ட்விட்டரை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டதால் பலரும் ட்விட்டரை கடுமையாக விமர்சித்தனர். RIP ட்விட்டர் என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டர் பதிவுகள் டிரெண்டிங்கில் முன்னிலை வகித்தது.

ட்விட்டர் முடங்கியாதாக வெளியான சில மணி நேரத்தில் எலான் மஸ்க் தனது ட்விட்டரில் ஒரு பதிவொன்றை பதிவிட்டிருந்தார். அதில், ”டேட்டா ஸ்கிராப்பிங் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சில தற்காலிக கட்டுபாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி வெரிஃபைடு அதாவது ப்ளூ டிக் சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளைப் படிக்க முடியும்.

ட்விட்டரில் இருக்கும் மற்ற சாதாரண பயனாளர்கள் 600 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும்.‌ புதிதாக ட்விட்டருக்கு வரும் Unverified பயனாளர்கள் இனி ஒரு நாளைக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு பலருக்கும் கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles