சாம்சுங் (Samsung) நிறுவனம் சாம்சுங் கேலக்ஸி A24 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது வியட்நாமில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல புதிய மற்றும் சிறப்பான அம்சங்களுடன் வெளியாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் காலத்துக்கு பொருத்தமில்லாத சிறிய பிரச்சினை உள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
சாம்சுங் கேலக்ஸி A24 போன் 4G வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 5G வசதி கிடையாது.
5G ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே தற்போது அதிக வரவேற்புள்ளதால் சாம்சுங் கேலக்ஸி A24 ஸ்மார்ட்போனின் எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ளமை குறிப்பிடதக்கது.