NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Samsung Galaxy Z Flip, Fold 5 பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் ஜூலை வெளியாகும்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

உலகளவில் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் சாம்சங் அதன் அடுத்த ஜெனரேஷன் பிலிப் மற்றும் Fold வகை ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடுகிறது.

தற்போது இந்த ஸ்மார்ட்போனின் அடுத்த ஜெனெரஷன் Model வெளியாக தயாராக இருக்கிறது. இந்த இந்த Z Flip மற்றும் Fold 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி வரும் ஜூன் மாதம் தொடங்கும்.

இந்த போல்டு வகை ஸ்மார்ட்போன்களில் 7.6 இன்ச் 120HZ AMOLED டிஸ்பிளே வசதி, 2K resolution இடம்பெற்றுள்ளது. இதனை நாம் மடித்தால் 6.2 இன்ச் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே ஸ்க்ரீன் உள்ளது. இது அதன் Z Fold 4 ஸ்மார்ட்போனை போன்றே டிசைன் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 50MP முக்கிய கேமரா வசதி, 12MP அல்ட்ரா வைட் கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா வசதிகள் உள்ளன. முன்பக்கம் இதில் 10MP செல்பி கேமரா வசதிகள் உள்ளன. பாதுகாப்பு வசதிகளாக IPX8 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. இதன் உள்ளே 400mAh பேட்டரி வசதி, 45W பாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங், S pen வசதியும் கிடைக்கும்.

Samsung Galaxy Flip 5
இந்த ஸ்மார்ட்போன் பிலிப் வகை போன் இதில் பின்பக்கம் சற்று பெரிய 3.4 இன்ச் கவர் டிஸ்பிளே உள்ளது. இதன் முன்பக்கம் 6.7 இன்ச் 120HZ refresh rate, AMOLED டிஸ்பிளே, முழு HD+ Resolution வசதி இருக்கும். இதில் கேமரா அம்சங்களாக 12MP முக்கிய கேமரா, 12MP அல்ட்ரா வைட் கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சற்று மிகப்பெரிய டிசைன் மாற்றங்கள் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles