NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடர்: இந்தியா வெற்றி…!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடைலான 2 டெஸ்டைக் கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 438 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், இந்திய அணி தனது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்த நிலையில், 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்கள் பெற்று மொத்தம் 301 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த போது மழை குறுக்கிட்டது.

இதனால் போட்டி நிறுத்தப்பட்டு மழையின் பின்னர் போட்டி மீண்டும் ஆரம்பமானது.

இதைத் தொடர்ந்து, இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 365 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 76 ஓட்டங்கள் பெற்றது.

இந்நிலையில், போட்டியின் இறுதி நாளான நேற்று தொடர்ந்து மழை பெய்ததனால் 5 ஆம் நாள் ஆட்டம் சமநிலையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா அணி தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles