மேற்கிந்திய தீவுகள் 19 வயதின் கீழ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடருக்கான 20 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ள 20 பேர்கொண்ட குழாத்தின் தலைவராக றோயல் கல்லூரியைச் சேர்ந்த சினெத் ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவராக ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த மல்ஷ தருபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் இந்த குழாத்தில் முக்கிய இணைப்பாக கொழும்பு சென். பெனடிக் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்பேசும் வீரர் சாருஜன் சண்முகநாதன் முதன்முறையாக 19 வயதின் கீழ் தேசிய இணைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இறுதியாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் விளையாடிய 9 வீரர்கள் இந்த தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் மல்ஷ தருபதி, தினுர கலுபான, சினெத் ஜயவர்தன, வியாஸ் தெவ்மிக, விசான் ஹலம்பகே, ஹிரான் ஜயசுந்தர, விஷ்வ லஹிரு, கருகே சன்கெத் மற்றும் விஷ்வ ராஜபக்ஷ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை 19 வயதின் கீழ் அணியில் சாருஜன் சண்முகநாதன்சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை 19 வயதின் கீழ் அணிகளுக்கு இடையிலான தொடர் எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், செப்டம்பர் 15ம் திகதி நிறைவடையவுள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.