NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு !

நெதர்லாந்து கிரிக்கெட் சபை (KNCB) அடுத்த மாதம் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய தமது வீரர்கள் குழாத்தினை வெளியிட்டுள்ளது.

ஸ்கொட் எட்வாட்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள நெதர்லாந்தின் உலகக் கிண்ண அணியில் ரொய்லேப் வன் டி மெர்வே, போல் வான் மீக்கிரேன் மற்றும் கொலின் அக்கர்மேன் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அறிமுக வீரர் சைபிரான்ட் எங்கல்பிரச்ட்டிற்கும் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகள் மூலம் இம்முறை உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவாகியிருந்த நெதர்லாந்து அணிக்கு துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்கும் வீரர்களாக விக்ரம் சிங், அணித்தலைவர் ஸ்கொட் எட்வார்ட்ஸ் மற்றும் மெக்ஸ் ஓடோவ்ட் ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர்.

இதேநேரம் பந்துவீச்சினைப் பொறுத்தவரை பாஸ் டீ லீடெ அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்க சகீப் சுல்பிகார் மற்றும் ஷரீஸ் அஹ்மட் ஆகியோர் அணிக்கு பிரதான சுழல்பந்துவீச்சாளர்களாக காணப்படுகின்றனர்.

நெதர்லாந்து கிரிக்கெட் அணியானது உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியினை ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles